Thursday, May 25, 2017

ஸ்ரீ ராமானுஜ அநு யாத்ரா 2016


ஸ்ரீ ராமானுஜர் நடந்து சென்று சேவித்த புண்யஸ்தலங்களுக்கு இரண்டு பாக யாத்திரைகளாக ஸ்ரீ வேளுக்குடி  ஸ்வாமிகள் கிங்சித்காரம் டிரஸ்ட் ஏற்பாடு செய்திருந்தது. அந்த யாத்திரையின் முதல் பகுதி தான் ஸ்ரீ ராமானுஜ அநு யாத்திரை 2016. அதில் பங்கு பெரும் பேரை ஆண்டவன் எனக்கு அளித்திருந்தான். அந்த யாத்திரையின் அனுபவங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
________________________________


புண்யஸ்தல யாத்திரை என்பது, ஒரு பொழுது போக்கு சாதனம் இல்லை. நம்மைப் பழுது பார்க்கும் சாதனை. 
ஒவ்வொரு வியாதிக்கும் ஒவ்வொருவிதமான மருந்து போல, ஒவ்வொரு ஜீவனுக்கும் கடைத்தேற ஒவ்வொரு விதமான ஆன்மீக அனுபவத்தையும், அதன் மூலமாக ஒரு ப்ரத்யேக உந்துதலையும் ஆன்மீக சாதனை ஏற்படுத்தும். அவ்விதமான உந்துதல் நம் யாத்திரை மூலம் நமக்குக் கிடைப்பதற்கு. நம்முடைய முன் முயற்சி சிறிது தேவைப் படுகிறது. அது நாம் சென்று சேவிக்கப் போகிற தலங்களின் பெருமையை தெரிந்து உணர்ந்து ஒரு எதிர்பார்ப்பை வளர்த்துக் கொள்வதே ஆகும்.

கடவுளை அடைய நாம் மேற்கொள்ளும் Spiritual Pilgrimage கீழ்கண்ட ஒன்பது படிகளைக் கொண்டது.

1. இறைவனின்  அவதார லீலா விநோதங்களையும்,   கல்யாண குணங்களையும்  கேட்கின்ற ஆசை. 
2. தனக்குத் தானே இறைவனின் மேன்மையைப் பாடிப் புளகித்தல்
3. இறைவனின் சௌந்தர்யத்தையும், காம்பீர்யத்தையும், கருணையையும்,    சௌலப்யத்தையும் நினைந்து நினைந்து நெகிழ்ந்துருகல்
4. இறை திருவடியை நினைந்து காதலாகிக் கசிந்து  கண்ணீர் மல்கி அதன்  வழி பாட்டில் ஈடுபடுதல் 
5. இவ்வாறான வழிபாட்டில் தன்னை மறந்து , வழி பாடு முதிர்ந்து  நோக்கம் நிறைவேறும் மார்கத்தில் தன்னை செலுத்துமாறு அதைக் கடைபிடித்தல் (Mature State)
6. இவ்வாறான எளிமையான ஆனால் அன்புடன் கூடிய வழிபாட்டின் முதிர்ச்சியால் சாதகன் இயற்கையிலும்  , காணும் எவ்வுயிரிலும் இறைவனைக் காணும் பக்குவத்தை அடைதல்
7. மேலும் முதிர்ச்சியால் அஹங்காரம் விட்டு எளிமையான  மனப்பாங்கையும் அடைதல்
8. அடுத்து பக்தன் இறைவனின் அணுக்கத் தொண்டன் என்ற நிலையிலிருந்து மேம்பட்டு அணுக்க நண்பன் என்னும் நிலைக்கு உயர்தல்
9. கடைசி நிலையான முற்றும் துறந்த சரணாகதி நிலைக்கு இது ஒரு முன்னோடியான நிலை.

மேற்கூறிய நிலைகளை அடைவதற்கு இறை அவதாரங்கள் மஹான்கள்  ஜனித்த , வசித்த அல்லது நடந்த புண்யஸ்தல யாத்திரை ஒரு சிறந்த தூண்டுகோலாக இருக்கும் என நம்பிக்கையைக் கொண்டு, அந்த ஸ்தலங்களின் மஹாத்மியத்தை  யாத்திரைக்கு முன்னமே நாம் அறிந்து கொள்வது யாத்திரையின் முதல் படியாகும்.

நாம் ஏன் ஸ்தலங்களின் சூக்ஷுமமான விஷயங்களை, முன்னமே அறிந்து வைத்துக் கொண்டு அனுபவிக்க வேண்டும் ?. எல்லோரும் செல்வது போல் , போய் பார்த்து விட்டு வந்தால் போதாதா ?.

பாகவதம் காண்டம் 1:5.10
"பகவானின் கல்யாண குணங்களையும் லீலா விநோதங்களை விவரிக்காத எந்த வார்த்தைகளையும் உபயோக கரமானதாகவோ, த்ருப்தி அளிக்கக்கூடியதாகவோ சத் புருஷர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அவ்வாறாக ஏற்றுக்கொள்வது காகங்களுக்காக தல யாத்திரை செல்வது போலாகும்.
காகங்கள் கழிவுகள் இருக்கும் இடங்களில் தான் வட்டமிடும். அன்னப்பறவைகள் சுகந்தமான ரம்யமான இடங்களில் தான் வாசம் செய்யும் தேடிப்போகும். அவை காகங்கள் கூடும் இடங்களை ரசிக்காது".

நாம் அன்னப் பறவைகளாய், ரசமான மற்றும் சாதாரணமாக அதிகம் வெளியில் தெரியாத சில விஷயங்களை தெரிந்து வைத்துக் கொண்டால் பயணம் ருசிக்கும். இல்லையென்றால் ரசித்து விட்டு வர வேண்டியது தான். அவ்வாறான விஷயங்களை இங்கு சுருக்கமாக நாம் பார்ப்போம். 
இவை நம்முடைய சிந்தையில் இறை அனுபவமாகப் பிறகு விரியும் என்ற நம்பிக்கை கொண்டு மேலே போவோம். 
“உண்மை எல்லோருக்கும் அல்ல. அதைத் தேடுபவருக்கு மட்டும்”
என்னும் பொன்மொழி ஏனோ என் ஞாபகத்திற்கு வருகிறது. 
ஆனால் உண்மை நம்மைத் தேடாமல், நாம் உண்மையை தேடும் உந்தல் நமக்கு வராது..
வாருங்கள் உண்மை நம்மைத் தேடுகிறது; நாமும் அதை நாடி ஓடுவோம்....!
( நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதால் மேலும் பல நல்ல விஷயங்களைத் தெரிந்து பயன் பெறலாம் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.- >
பர்த்ருஹரி யும் பட்டினத்தார் சீடர் பத்ர கிரியாரும் ஒன்று என்ற செய்தியை , பர்த்ருஹரி என்ற பெயரைப் படித்த மாத்திரத்திலேயே எடுத்துரைத்த H.கண்ணனுக்கு நன்றி. அந்த விவரத்தையும் இங்கே பின்னால் சேர்த்திருக்கிறேன். )

கீழ்க்கண்ட இடங்கள் வரும் நாட்களில்,..ஒவ்வொன்றாகக் காண்போம்...

ஒவ்வொரு போஸ்ட் போடப்படும்போது அந்தந்த இடத்தின் பெயரில் லிங்க் சேர்க்கப்படும்.கீழ்க்கண்ட ஒவ்வொன்றும் மஞ்சள் நிறமாக மாறினால் லிங்க்  சேர்க்கப்பட்டு விட்டது என்று கொள்க.




       கோமதி துவாரகா ,பேட் துவாரகா ,டாகூர் துவாரகா,
       கங்ரோலி துவாரகா,நாத் துவாரகா

யாத்திரைப் பாடல்கள்






க்ருஷ்ண  … க்ருஷ்ணா










No comments:

Post a Comment