Wednesday, October 18, 2017

பர்த்ருஹரி குகைகள்


“ஆசைகளை நாம் அனுபவிக்கவில்லை ஆசை  நம்மை விழுங்குகிறது
யாகத் தீ எரியவில்லை, நாம் தான்  எரிந்து கொண்டிருக்கிறோம்
காலம் செல்வதில்லை அது எப்போதும் முடிவற்றது; இருந்து கொண்டிருக்கிறது; நாம் தான் வந்து சென்று கொண்டிருக்கிறோம்
ஆசைகள் முதுமையில் குறைவதில்லை நாம் தான் முதுமையில் குறைந்து கொண்டிருக்கிறோம்” - வைராக்ய சதகம்
-
விக்ரமாதித்ய மாமன்னரின் சகோதரன் பர்த்ருஹரி சகல சுகங்களையும் துறந்து த்யானம் செய்த இடம், இந்த குகையாகும் .அண்ணனான இவர், ராஜ்யத்தைத் துறந்ததால் தான் தம்பி விக்ரமாதித்யன் அரசரானார்.
இவர் சமஸ்க்ருத இலக்கணத்தை (செய்யுள் இலக்கணம் உட்பட ) வகைப் படுத்தியவர். பதஞ்சலி முனிவரின் சமஸ்க்ருத இலக்கண விதிகளை மேலும் வகைப்படுத்தி ஸ்திரப்படுத்திய பெருமை இவரையே சாரும்.
ஆன்மீக உலகில் புகழ் பெற்ற வைராக்ய சதகம் இவரால் செய்யப்பட்டதே.
பத்ரகிரியார் என்ற பெயரில் பட்டினத்தாரின் சீடராகத் திகழ்ந்த இவருடைய ஞானப் புலம்பல் பாடல்கள் (தமிழ்..ஆம் தமிழில் தான்..!)  மிகவும் பொருள் பொதிந்தது
Sample ->
“தந்தை, தாய், மக்கள், சகோதரரும் பொய்யெனவே
சிந்தைதனில் கண்டு திருக்கறுப்பது எக்காலம்? 13
உற்றுற்றுப் பார்க்க ஒளிதரும் ஆனந்தம்அதை
நெற்றிக்கு நேர்கண்டு நிலைப்பது இனி எக்காலம்? 227”



உலகப் பொருள் பால் பட்ட சுகங்களின் உச்சியில் திளைத்துப் பின் அவற்றை அறவே துறந்து யோக உலகில் பரசுகத்தைச் சுகிப்பதில் நாட்டம் கொண்ட பர்த்ருஹரி ஒரு தனிப்பிறவி. அவர் த்யானம் செய்த இடம் சிறப்புற்றது அல்லவா ?













No comments:

Post a Comment