Thursday, May 25, 2017

உஜ்ஜயின்


மத்யப்ரதேசத்தில்  ஷிப்ரா நதிக்கரையில் அமைந்துள்ள உஜ்ஜைன் இந்த்ரபுரி அமராவதி, அவந்திகா புரி என்ற வேறு பெயர்களையும் கொண்டது.

மஹா காலேஷ்வர் குடி கொண்டு அருள் செய்யும் இத்தலம்  ஏழு மோக்ஷஸ்தலங்களில் ஒன்றாகும். மேலும், இத்தலம், பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.

முக்தி தரும் ஏழு தலங்கள்:
1. அயோத்தி, 2. மதுரா, 3. மாயா (ஹரித்வார்), 4. துவாரகை, 5. காசி, 6. அவந்தி (உஜ்ஜயினி), 7. காஞ்சி
ஜ்யோதிர் லிங்க தலங்கள்
சோம்நாத் (குஜராத்), மல்லிகார்ஜுன ஸ்வாமி (ஸ்ரீ சைலம்), மஹா காலேஸ்வர் (உஜ்ஜைன்), ஓம்காரேஸ்வர் (மத்தியபிரதேசம்),கேதாரநாத்,பீமசங்கர்(மஹாராஷ்ட்ரா),காசி விஸ்வநாதர்,த்ரயம்பகேஸ்வரர்(மஹாராஷ்ட்ரா)

 12 வருடங்களுக்கு ஒரு முறை கும்பமேளா நடைபெறும் நான்கு தலங்களில் இதுவும் ஒன்று.
மற்ற மூன்று கும்ப மேளாத்   தலங்கள் - நாசிக்,ஹரித்துவார் மற்றும் அலஹாபாத் ஆகியவை.

கண்ணபிரானின் குருவாகிய சாந்திபினி முனிவரின் ஆசிரமம் இத்தலத்தில் உள்ளது.

முன் காலத்தில் , தங்கக் கோபுரங்கள் பலவற்றைக் கொண்ட நகரம் என்பதால் ஸ்வர்ண ஸ்ருங்கா என அழைக்கப் பட்டது.

சகாப்தத்தைத் தோற்றுவித்த சாலிவாகனன், மகாகவி காளிதாசர், தண்டி முதலிய மேதைகள் வாழ்ந்த தலம்.


மஹாகாளேஸ்வர்
த்ரிபுராரி சிவ சங்கரா
நாக பூஷணா நாகாபரணா
(த்ரிபுராரி சிவ சங்கரா)
ஓம்காரேஸ்வர நமச்சிவாய
மஹா காலேஸ்வர நமச்சிவாய

மாகாளர் பாதாளத்தில் கம்பீரமாக, கவசத்தில் காட்சித் தருகிறார். பூமிக்குள் பல படிகள் இறங்கிப் பாதாளத்தில் தான் மாகாளேசுவரரைத் தரிசிக்க வேண்டும்.
தல மஹிமையைக் கூறும் ஒரு பாடல் இத்தலத்தை சிவனின் மனம் உகந்த ஸ்தலம் என்று பாடுகிறது. இத்தலத்தின் ஜ்யோதிர் லிங்கத்தை தரிசித்தவரைக் கனவிலும் துன்பம் அண்டாது என்றும் கூறுகிறது

மஹா காலேஸ்வருக்கு நடைபெறும் மயானச் சாம்பல் அபிஷேகம் மிகவும் பிரசித்தி பெற்றது . சாதாரணமாக மயானச் சாம்பல் நம் மீது படும்போது பிணியைக் (Infection) கொடுக்கிறது. மஹாகாளேஸ்வரனின் மேனி பட்ட மயானச் சாம்பல், பிறவியின் தாமசச் சோம்பலைப் போக்கி சத்வமாக்குகிறது(Perfection).

இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
மஹாகாளேஸ்வர் கோவிலுக்கு அருகே தான் ஷிப்ரா நதி ஓடுகிறது .
ஷிப்ரா நதியின் கரையில் வரிசையாகப் பல சிவலிங்கங்கள் உள்ளன.
இந்நதிக் கரையில் விக்கிரமாதித்தனின் குல தெய்வமாகிய வரசித்தி மாதா கோயில் உள்ளது.

இதோ  இத்தலத்தின் சில நினைவுகள் ...

ஷிப்ரா நதி









நாங்கள் தங்கி இருந்த இடம்














ஷிப்ரா நதிக்கரையில் உபன்யாசம் 
























No comments:

Post a Comment