விண்ணின்று-பூமி மண்-வந்த
ஸ்வாமி
கண்ணே-கண்..மணியே-நீ தானடா
பொன்னே-பொன்..மணியே-வே..றேனடா
இப்படித்
தான் துவாரகைக் கண்ணனை பாகவதத்தில் ஸுக முனிவர்
போற்றுகிறார்.
“சந்தேகத்திற்கு இடமில்லாமல் விண்ணுலகை இந்த மண்-நகரம்
(துவாரகை) அழகில், அற்புதத்தில், அன்பு மயத்தில்
தோற்கடித்து விட்டது.இங்கல்லவோ உண்மைக் கண்ணன், எங்கும் நிறை எண்ணன் (Cosmic
Conciousness), அன்பின் வடிவாகக் காட்சி அளிக்கிறான். என்னே பாக்யம் துவாரக வாசிகளுக்கு
. அவர்களைக் கடைக்கண்களால் கண்டு தன் இனிய புன்னகையால் தன் வயப்படுத்துகிறான்”
- ஸ்ரீமத் பாகவதம் காண்டம்:1,அத்யாயம்
:10,ஸ்லோகம் :27
துவாரகை
நாதனைப் பற்றி நான் சொல்வதை விட பாகவத ஸ்லோகத்தில் இன்னொன்றைக் கேளுங்களேன்..
“ த்வாரகை வாசிகள் , அழகின் தேக்கத்தைக் கண்டு
மகிழ்வதையே தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வந்தனர். கண்ணன் வரும் வழியிலெல்லாம் ஆயிரத்தில்
மக்கள் காத்துக்கிடந்தனர். ஆயிரம்
தரம் அந்த அழகு வெள்ளத்தில் முங்கிக் குடித்தும் அவர்கள் தாகம் தீரவில்லை.
அவன் மார்பு அதிருஷ்ட தேவதையின் உறைவிடம்.
சந்திரன் போன்ற அவன் முகம், அழகைக் குடிக்க ஏங்கும் கண்களுக்கு ஒரு பாத்திரம். அவன்
தோள்கள் , அண்டத்தில் பல் வேறு பணிகளில் ஈடுபட்டுள்ள தேவர்களின் உறைவிடம்.
அவன் தாமரை மலர்ப் பாதங்கள் , அவனையன்றி வேறு
நினைப்பில்லாத பக்தர்களின் உறைவிடம். துவாரகைத்
தெருக்களில் கண்ணன் நடக்கும்போது, சூரிய வெப்பத்திலிருந்து அவனைக் காக்க வெண் பட்டுக்
குடை அசைந்தாடுகிறது. அரைவட்டச் சாமரங்களும் அசைந்தாடுகின்றன. அவன் நடக்கும் பாதையெல்லாம்
மலர் மாரிப் பொழிகின்றது. கண்ணனுடைய
மஞ்சள் பட்டாடையும் , மலர் மாலைகளும் ; கரு மேகத்தை சந்திரனும் சூரியனும், மின்னலும்
, வானவில்லும் ஒரு சேரச் சூழ்ந்ததோ என்னுமாறு இருக்கிறது.”
- ஸ்ரீமத் பாகவதம் காண்டம்:1,அத்யாயம்
:11,ஸ்லோகம் :25-27
அடடா....நான்
ஏன் இதுவரை துவாரகைக்குச் செல்லவில்லை...இன்னும் அத்தனை நாள் காத்திருக்க வேண்டுமா
என்ற ஏக்கம் தோன்றவில்லையா ?...!!!
கடல் கொண்ட நகரம். கண்ணன் காலத்தில் உளம் கவர்ந்த சொர்க்கம்.
அழகில் இந்திர புரியைப் போல் விளங்கிய இந்த நகரம் , தன் மறைவுக்குப் பின்
கடலில் முழுகும் என்றும் அதனால் அந்நகரில் வசிக்கும் 56 கோடி யாதவர்களும் நகரை விட்டு வெளியேற வேண்டும் என்றும் செய்தி அனுப்புகிறார்
துவாரகா நகரிலிருந்து அனைவரும் வெளியேற 7 நாட்கள் பிடித்ததாம்
வைர வைடூர்யங்களால் அலங்கரிக்கப்பட்ட அழகான 90,000 மாளிகைகள்
இருந்ததாகக் கூறப்படுகிறது.
பக்தியின் சின்னமான மீரா பாய் இங்கு தான் முக்தி அடைந்தார் என்று கூறப்படுகிறது
30 லக்ஷம் வருடங்களாக இருக்கும் ஏழு தீவுகளை உள்ளடக்கியது துவாரகா.
இங்குதான் பரமாத்மா தன் 16,108 பத்னிகளுக்காக 16,108 உருவங்களை
எடுத்தார், 16,108 அரண்மனைகளைச் செய்தார்.
1983 ல் இந்தியாவின் தலை சிறந்த அகழ்வாராய்ச்சியாளர்
Dr. S.R .ராவ் தலைமையில் துவாரகையின் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.
( More here
-> http://www.abovetopsecret.com/forum/thread657629/pg1 & in tube as Dwarka: Atlantis of the East (FULL MOVIE))
அவை, பாரதம் கட்டுக் கதையல்ல கண்ணன் வெறும் சிலையல்ல என்று கண்ணிருந்த
குருடர் பலருக்கு காட்டுகின்றன
துவாரகா ,டாக்கோர் துவாரகா , கோமதி துவாரகா, பேட் துவாரகா, பிரபாஸ் ஸ்ரீ நாத துவாரகா என்ற ஐந்தும் பஞ்ச துவாரகா என்று
அழைக்கப்படுகின்றன.
துவாரகாநாத் கோவில்
முதன் முதலில் துவாரக்நாத் கோவில் கிருஷ்ணனுடைய கொள்ளுப் பேரனான
வஜ்ரநாபனால் 2500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அப்பொழுது அது குடை வடிவில் அமைந்திருந்தது.
பின்னர் அது பல மாற்றங்களைக் கண்டு இப்பொழுது ஏழு நிலைகளைக் கொண்டதாக 72 நிலைக்கம்பங்களின் (Pillars) மேல் அமைந்தது.
சூர்ய சந்திர ர்களுடன் கூடிய பல வர்ணக் கோடி 84 அடிக் கம்பத்தில் பறக்கிறது
No comments:
Post a Comment