Thursday, October 19, 2017

பேட் துவாரகா



துவாரகைக்கு வடக்கே 30 KM தூரத்தில் உள்ள இது ஒரு தீவாகும்.
ரமண த்வீபம் என்று அழைக்கப் படும் இந்த தீவுக்குத் தன் குடும்பத்துடன் அடிக்கடி கண்ணன் சென்று மகிழ்ந்திருந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.
இங்குள்ள, 500 வருடங்களுக்கு முற்பட்ட , வல்லபாச்சார்யரால் கட்டப்பட்ட மிகப் பெரிய கிருஷ்ணன்  கோவிலில் பூஜை செய்யப்படும் கண்ணன் சிலை ருக்மிணி மாதாவால் செய்யப்பட்டது என்று நம்பப்படுகிறது. 
இந்த தலத்தில் அனுமனுக்கு ஒரு கோவில் உள்ளது. அதில் அனுமனின் புத்திரனுக்கு (ஆம் அனுமனின் புத்திரன் தான் ) ஒரு சந்நிதி உள்ளது. அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கிக்கொண்டு பயணிக்கும்போது அவரின் வியர்வைத் துளி ஓர் மீனின் வாயில் விழ அதன் மூலமாக மகரத்துவஜன் என்ற மகத்தான பலசாலிக் குழந்தை பிறந்தான் என்பது ராமாயணக் கதை.
தசராக் கொண்டாட்டங்களின் போது , இந்த கோவிலில், கிருஷ்ணர் சிலைக்கு ராமர் போல் அலங்காரம் செய்து பல்லக்கில் சேவை சாதிக்கச் செய்வது இன்றும் வழக்காக இருக்கிறது. ராமன் இருக்கும் இடத்தில் எல்லாம் அனுமன் இருப்பார் என்பார்.. ஆனால் , அனுமன் (பக்தன்) இருக்கும் இடத்தில் அன்றோ ராமன் இருக்கிறான்.
  மதங்களுக்கு அப்பாற்பட்டவன் இறைவன் என்பதை வெளிக்காட்டும் விதமாக, இரண்டாம் நூற்றாண்டுகளிலேயே இஸ்லாமிய ஸுஃபி கள் பலர் துவாரகைக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் துவாரகைக்கு வடக்கே 30 KM தூரத்தில் உள்ள பேட் துவாரகையில் தங்கித் தவம் புரிந்துள்ளனர்.
பிரம்மம் ஒன்றே என்று உணர்ந்து அதைப்  அவர்கள் பிரகடனப் படுத்தியும் உள்ளனர்.

















இன்னும் நிறைய படங்கள் உள்ளன.





No comments:

Post a Comment